அதன்பின் மீதமுள்ள ஆட்டத்திற்கு 30 நிமிடங்கள், நகர்வு 1ல் தொடங்கி ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் அதிகரிக்கும். பிரக்னாநந்தா தனது முதல் நகர்வாக c4 க்கு செல்ல, கார்ல்சன் e5 க்கு சென்றார். இந்தியத் தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் இறுதிப் போட்டியின் முதல் நகர்வை மேற்கொண்டார். பிரக்னாநந்தா 12வது நகர்வாக d3 க்கு செல்ல, கார்ல்சன் h6 க்கு தனது நகர்வை மேற்கொண்டார்.
அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இருவரும் பொறுமையாக இருந்தனர். மேக்னஸ் கார்ல்சன் தனது 13வது நகர்வில் 28 நிமிடங்கள் செலவிட்டார். பிறகு பிரக்ஞானந்தா தனது நகர்வுகளில் நேரத்தை எடுத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் கார்ல்சன் பிரக்ஞானந்தாவின் நகர்வுகளுக்கு விரைவான முறையில் காய் நகர்த்தினார்.
இந்நிலையில், முதல் சுற்று முடிவடைந்துள்ளது. இதில் இருவரும் 1/2 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர்.