உலக செஸ் சாம்பியன்ஷிப்:5 வது முறையாக பட்டம் வென்று கார்ல்சன் சாதனை!

Default Image

துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன், 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு உலக சாம்பியனும்,உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ளவருமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் மற்றும் உலகத் தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி ஆகியோர் மோதினர்.

இப்போட்டியின்,தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட கார்ல்சன், 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார்.இவருக்கு சுமார் ரூ.9 கோடி பரிசுத் தொகையும் கிடைத்தது.

இந்த வெற்றி தொடர்பாக கார்ல்சன் கூறுகையில்,”ஆனந்த் உடனான எனது முதல் போட்டியுடன் (2013 இல்) இது மிகவும் ஒத்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.இது தொடக்கத்தில் மிகவும் சமமாகவும் பதட்டமாகவும் இருந்தது.நிச்சயமாக,நான் நிம்மதியாக இருக்கிறேன்.இது இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, மேலும் இது ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த தொழில்முறை செயல்திறன் என்று நான் நினைக்கிறேன். எந்த வருத்தமும் இல்லை, மிகவும் திருப்தியாக உள்ளது,”என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக,உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2000, 2007 முதல் 2012 வரை தொடர்ந்து ஐந்து முறை சாம்பியனாக இருந்து வந்த நிலையில்,அதன்பின்னர்,ஆனந்தை வென்று 2013 முதல் 2021 வரை என தொடர்ந்து ஐந்தாவது முறையாக கார்ல்சன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று ஆனந்த் சாதனையை சமன் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்