உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று (நவ.25) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் உள்ள ஈக்வாரிஸ் ஹோட்டலில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளன.
இன்று தொடங்கும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டிச. 13ம் தேதி வரை 14 சுற்றுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இன்றைப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய வீரர் குகேஷுடன் நடப்பு சாம்பியன் டிங் லிரேன் மோதுகிறார்கள்.
வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைப் புள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, இளம் வயதில் உலக சாம்பியனாவதற்கு இந்திய வீரர் குகேஷு காத்திருக்கிறார்.
இதற்கு முன், குகேஷும் டிங்கும் மூன்று முறை மட்டுமே கிளாசிக்கல் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில், இரண்டு போட்டியில் டிங் வென்றார், ஒன்று டிராவாகமுடிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதர்லாந்தில் நடந்த டாடா ஸ்டீல் போட்டியில் குகேஷை டிங் தோற்கடித்தார்.
இருப்பினும், ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவும் சீனாவும் நேருக்கு நேர் மோதின, அங்கு குகேஷுக்கு எதிராக டிங் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.