#JUSTNOW:காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் லைட்வெயிட் பிரிவில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றார்..
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பெண்களுக்கான 48-50 கிலோ பிரிவில் இந்திய குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார். இது காமன்வெல்த் விளையாட்டு 2022 குத்துச்சண்டையில் இந்தியாவின் மூன்றாவது தங்கம்.
நடப்பு உலக குத்துசண்டை சாம்பியனான நிகாத் ஜரீன், இன்று நடைபெற்ற பெண்கள் லைட்வெயிட் குத்துசண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி மெக்னாலை வீழ்த்தி, சாம்பியனாகி தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 17வது தங்கம் மற்றும் 48வது ஒட்டுமொத்த விளையாட்டுப் பதக்கம் கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்தியா பதக்கப் பட்டியலில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியது.