உலக குத்துச்சண்டை போட்டி: மேரி கோம்-க்கு பின் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஜரீன்!
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார், இந்திய வீராங்கனை நிகத் ஜரீன்.
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய அணி சார்பாக 25 வயதாகும் நிகத் ஜரீன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இவர் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்குடன் மோதினார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை ஆவார். இவருக்கு முன்னதாக மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி, லேகா ஆகிய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.