ஸ்பெயினில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,சக நாட்டு வீரரான லக்ஷயா சென்னுடன் மோதினார்.
முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த்,அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை தனது வசப்படுத்தினார்.போட்டியின் இறுதியில் ஸ்ரீகாந்த் 17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு புதிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக ,1983 ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனேவும், 2019 ஆம் ஆண்டு சாய் பிரனீத்தும் உலக பேட்மிண்டன் அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில்,தற்போது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஸ்ரீகாந்த் சாதனை புரிந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…