உலக தடகள போட்டி: குழந்தை பெற்ற பிறகு தங்கம் வென்ற முதல் பெண்..!
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 32 வயது ஷெல்லி என்ற பெண் கலந்து கொண்டு 10.71 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
இவர் இதற்கு முன் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் 2009 , 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றார். குழந்தை பெற்றதால் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். இதன் மூலம் குழந்தை பெற்ற பிறகு தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் ஒலிம்பிக் போட்டியில் 2008 , 2012 ஆகிய ஆண்டுகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.