WT20I : கோலாகலமாக தொடங்கும் மகளீர் உலகக்கோப்பை! இன்றைய 2 போட்டிகள்!

மகளீர் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளீர் அணியின் போட்டியானது நாளை துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொண்டகவுள்ளது.

Womens T20 World Cup 2024

ஷார்ஜா : ஐசிசியின் மகளீருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று கோலாகலமாகத்  தொடங்குகிறது. இதில், இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளது.

இந்த போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது போட்டியாக பாகிஸ்தான் மகளீர் அணியும், இலங்கை மகளீர் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் நடைபெறும் போட்டியைத் தொடர்ந்து அதே ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக வங்கதேசத்தில் இந்த தொடரை நடத்தலாம் என திட்டமிட்ட ஐசிசி அதன்பிறகு அங்கு நிலவிய கலவர சூழல் காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் மாற்றி வைத்தது. மேலும், இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளை, 5 அணிகள் வீதம் இரண்டு (குரூப் – A மற்றும் B) பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அதில், ஒரு அணி குரூப்பில் உள்ள மற்ற அணிகளோடு தலா 1 முறை விளையாடவேண்டும். இறுதியில், லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்திய மகளீர் அணி போட்டியானது நாளை தொடஙவுள்ளது.

அதன்படி, நாளை 7.30 மணிக்கு இந்திய மகளீர் அணி, நியூஸிலாந்து மகளீர் அணியை துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இந்த முறை கண்டிப்பாக டி20 உலகக் கோப்பையை வென்றே ஆவோம் என தெரிவித்துள்ளனர். இதனால், இந்திய ரசிகர்கள் மகளீர் அணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts