மகளிர் உலகக்கோப்பை: இலங்கை அணியை பேட்டிங் அழைத்த நியூசிலாந்து.!
- இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர்.
- இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது.
பெண்களுக்கான உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அதில் முதல் போட்டி நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி தொடங்கி உள்ளது.இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளனர்.இந்த போட்டி முதல் போட்டி நடைபெற்ற W.A.C.A. மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி வீராங்கனைகள்:
சோஃபி டெவின் (கேப்டன் ), ரேச்சல் பூசாரி (விக்கெட் கீப்பர் ), சுசி பேட்ஸ், மேடி கிரீன், கேட்டி பெர்கின்ஸ், கேட்டி மார்ட்டின், அமெலியா கெர், ஹேலி ஜென்சன், லே காஸ்பெரெக், லியா , ஜெஸ் கெர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இலங்கை அணி வீராங்கனைகள்:
சாமரி அதபத்து (கேப்டன்), ஹசினி பெரேரா, ஹர்ஷிதா மாதவி, அனுஷ்கா சஞ்சீவானி (விக்கெட் கீப்பர்), சசிகலா சிறிவர்தனே, நிலாக்ஷி டி சில்வா, அம காஞ்சனா, கவிஷா தில்ஹாரி, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதுலாசி, ஆச்சினி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.