WT20 : நாளை தொடங்கும் மகளீர் டி20 கோப்பை! இந்திய அணியின் போட்டி எப்போது?
ஐசிசியின் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை தொடங்கவிருக்கும் நிலையில், அதில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது.
துபாய் : இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையானது நடைபெற்றது. அதில் இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியது. தற்போது, மகளீருக்கான டி20 உலகக்கோப்பை தொடரானது நாளை (அக்-2) தொடங்கவுள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது.
நாளைத் தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியாக வங்கதேச மகளீர் அணியும், ஸ்காட்லாந்து மகளீர் அணியும் மோதவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற எந்த ஒரு டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய மகளீர் அணி கோப்பையை வென்றது இல்லை.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் கூட இந்திய மகளீர் அணி, ஆஸ்திரேலிய மகளீர் அணியிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கும். மேலும், இந்த ஆண்டு இந்திய ஆடவர் அணி டி20 கோப்பையை வென்று அசத்தியது.
இதனால், நடைபெறவுள்ள இந்த தொடரை இந்திய மகளீர் அணி கண்டிப்பாக வெல்வார்கள் என இந்திய ரசிகர்கள் எதிரிபார்ப்பில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த மகளீர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அந்த 10 அணிகளும், 5 அணிகளாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளனர். அதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் குருப்-A பிரிவிலும், வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் குரூப்-B பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்திய மகளீர் அணியின் போட்டிகள் :
அக்டோபர்.4 – இந்தியா vs நியூஸிலாந்து
அக்டோபர்.6 – இந்தியா vs பாகிஸ்தான்
அக்டோபர்.9 – இந்தியா vs இலங்கை
அக்டோபர்.13 – இந்தியா vs ஆஸ்திரேலியா