விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி..!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி லண்டனில் நடைபெற்றதில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி மற்றும் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா இடையே நடைபெற்றது. இதில் மூன்று செட்கள் நடந்தது. அதில் முதல் செட்டில், ஆஷ்லி பார்டி 6-4 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
இரண்டாவது செட்டில் பார்டி கடுமையாக முன்னேற முயன்றார். இருந்தபோதிலும், 6-7 என்ற கணக்கில் கரோலினா வென்றுள்ளார். இதனை அடுத்து இறுதி கட்ட முடிவை தெரிவிக்கும் மூன்றாவது செட்டில் பார்டியின் அசத்தலான ஷாட்களால் கரோலினாவை 6-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.
இதனால் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி 6-4, 6-7, 6-3 என்ற கணக்கில் கரோலினாவை வீழ்த்தி விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், இவர் இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.