டென்னிஸ் போட்டியின் மிக பெரிய தொடர்களில் ஒன்றாக கருதப்படும் விம்பிள்டன் கோப்பைக்கான தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு உள்ளார்.
இதில் இன்றைய ஆட்டத்தில் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டைலர் பிரிட்ஸை கடுமையாக போராடி வீழ்த்தியுள்ளர். இதனை தொடர்ந்து விம்பிள்டன் நிர்வாகம் தனது இணையதள பக்கத்தில் நடால் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் பாகுபலி என எழுதியுள்ளது.
ரஃபேல் நடால், கடுமையான வயிற்றுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். போட்டிக்கு இடையில் கூட மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் போட்டியை தொடர்ந்தார்.
இன்னும் சில மருத்துவ சோதனைகள் எடுக்க வேண்டி உள்ளது. அதன் ரிசல்ட் என்ன என்பது எனக்கு தெரியாது. கடந்த ஒரு வாரமாகவே இந்த வயிற்று வலி இருந்து கொண்டு இருக்கிறது. தற்போது போட்டியின் போது தீவிரமடைந்து வருவதாகவும் ரஃபேல் நடால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது அது பற்றி கேட்கப்பட்ட போது , நேர்மையாக சொல்லவேண்டும் என்றால், அப்போதைய சூழ்நிலை எனக்கு தெரியாது. என பதிலளித்தார். இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், ரஃபேல் நடால் பாகுபலி என்றால் இது தொடக்கமா? முடிவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…