தொடரை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ்..? முதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை கைப்பற்றுது.
இது தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டம் டி20யிலும் தொடர்கிறது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 3-வது டி20 போட்டி கிரெனடா நகரில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025