ஆரம்பமாகுமா பயிற்சி.? – சிஎஸ்கேவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ்.!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன.
உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளm அதிகம் உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இதில், கடந்த 21- ம் தேதி ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டனர்.
இதையடுத்து, பரிசோதனை முடிவில் இளம் வீரரான தீபக் சாஹர், ருதுராஜ் மற்றும் ஊழியர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளதால் இன்று சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை சோதனை நடத்தப்படும் என்றும் அதிலும் நெகட்டிவ் வந்தால் பயிற்சி ஆட்டம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.