பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த இரு அணிகளும் முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெற இருந்தது.இப்போட்டியின் போது தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணி தொடங்க உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் தான் இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பத்து வருடத்திற்கு பிறகு ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் போட்டியை பார்க்க உள்ளனர்.அதனால் இன்றைய போட்டியாவது நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…