ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது சாத்தியல்லை என சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதனால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் ஐ.சி.சி. இது குறித்து பேசாமல் மவுனம் காத்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மூன்று முறை ஐ.சி.சி. ஆலோசனை நடத்தியது. அப்போது, உலக கோப்பை போட்டி குறித்து அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.
இந்நிலையில், இன்று மீண்டும் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் உலக கோப்பை போட்டி நடத்துவதா..? அல்லது தள்ளிவைப்பதா..? என்பது குறித்து அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி நடைபெற இருந்த 13-வது ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் ஐ.பி.எல் நடத்துவது குறித்து முடிவு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…