தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று 3வது போட்டியில் பலப்பரீட்சை!
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் போட்டி மழையால் கை விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 2வது போட்டி நடைபெற்ற நிலையில், அப்போது இந்திய அணி பேட்டிங் முடிவில் மழை குறுக்கீட்டாதல் இரண்டாவதாக பந்து வீசிய இந்திய அணிக்கு சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்தது.
அதனால், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த ஊழலில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது (கடைசி) டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இப்போட்டி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. எனவே, இன்று நடைபெறும் 3து போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் டி20 தொடரை 2 – 0 என கைப்பற்றி விடும். இந்திய அணி வென்றால் தொடரை சமன் செய்ய முடியும்.
காசாவிற்கு ஆதரவாக வாசகம்.! நாளை உஸ்மான் கவாஜா விளையாட தடையா..?
மூன்றாவது போட்டி நடைபெறும் மைதானம் அதிக ரன் குவிப்புக்கு சாதகமாகவும், மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தான் தேர்வு செய்யும் என கூறப்படுகிறது. இதுவரை அங்கு நடந்த டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 17 முறையும் வென்றுள்ளன. இதனால், டாஸ் ஒரு விஷயமாக பார்க்கப்படாது.
இந்த சூழலில் இந்திய அணியில் ஒருசில மாற்றங்கள் கொண்டுவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.அதில் , குறிப்பாக தொடக்க வீரரான சுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. இதுபோன்று, குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னாய் இடம்பெறுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது..