இன்று அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான (U19) உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.
  • இதனிடையே இந்திய அணி கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது.

தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான (U19) உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய அணி கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என குறிப்பிடப்படுகிறது. இந்திய அணியில் யஷஸ்வி, அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலிமையுடன் உள்ளது. அதைப்போன்றுபாகிஸ்தான் அணியிலும் அதிவேக பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இப்போட்டி இரு அணிக்கும் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரு அணிகளும் 10-வது முறை இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த 9 ஆட்டங்களில் 5 முறை பாகிஸ்தானும், 4 முறை இந்தியாவும் வென்றுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு சென்வெஸ் பார்க், போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தியா யு19 அணி விவரம் : பிரியம் கார்க் (கேப்டன்), துருவ் ஜுரேல் (WK), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, திலக் வர்மா, சித்தேஷ் வீர், அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், வித்யாதர் பாட்டில், சுபாங் ஹெக்டே, சஷ்வத் ராவத், குமார் குஷாகிரா.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

1 hour ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

7 hours ago