ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

hardik and rohit

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைப் பெறச்செய்த ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது மும்பை அணியின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா இடம்பிடித்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என்கிற யோசனை அனைவரிடத்திலும் வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்குவதற்கும், அவரை கேப்டனாக நியமிப்பதற்கும் அவருடைய கேப்டன் பதவி ஒரு காரணமாக இருக்கலாம்.

ஏனெனில் அவர் இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த போது, இரண்டு ஐபிஎல் சீசனிலும் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதில் ஒரு சீசனில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். தான் கேப்டனாக நியமிக்கப்பட்ட இரண்டு தொடர்களிலும் தனது அணியை இறுதிப்போட்டி வரைக்கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றார்.

உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், விளையாட்டில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது போல ஒவ்வொரு வீரரும் என்றாவது ஒருநாள் ஆட்டத்தை விட்டு விலகுவார்கள். அந்த வகையில் 36 வயதான ரோஹித் ஷர்மாவும் ஐபிஎல் தொடரிலிருந்து ஒய்வு பெறலாம். எனவே மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மாவிற்கு சமமான ஒரு கேப்டன் வேண்டும் என்ற எண்ணத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்