யாருக்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம்? ரஃபேல் நடால் vs டேனில் மெத்வதேவ் மோதல்..!

இன்று, நடால் – மெத்வதேவ் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால் மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்தவெள்ளிக்கிழமை நுழைந்தார்.
இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார். அதே நாளில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் டேனியல் மெத்வதேவ்- ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் இருவரும் மோதினர். இப்போட்டியில் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை 7-6 (7-5), 4-6, 6-1, 6-1 என்ற கணக்கில் டேனியல் மெத்வதேவ் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று, நடால் – மெத்வதேவ் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 21 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கி நடால் விளையாட உள்ளார். இறுதிப் போட்டியிலும் நடால் வெற்றி பெற்றால், நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரரை சாதனையை முறியடித்து 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார். 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் ஆடவர் டென்னிஸ் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.