லெஜண்ட் லீக் கிரிக்கெட்: இன்று சுரேஷ் ரெய்னா அணியுடன் மோதப்போவது எந்த அணி தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

இரண்டாவது சீசன் ’லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடர் கடந்த நவம்பர் 18ம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 15 லீக் போட்டிகள், இரண்டு தகுதிச் சுற்றுகள், ஒரு எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தமாக 19 போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் பிற்பகல் போட்டிகளுக்கான தொடக்க நேரம் 3 மணி ஆகவும், மாலை போட்டிகளுக்கான தொடக்க நேரம் 6.30 மணியாகவும் இருக்கும். தற்போது வரை இரண்டு லீக் போட்டிகள் முடிந்துள்ளன. அதன்படி, தொடக்க ஆட்டத்தில் இந்தியா கேபிடல்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகள் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் மைதானத்தில் விளையாடியது.

லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் ஒரு கையால் சிக்ஸர் அடித்த ‘யுனிவர்ஸ் பாஸ்’..!

இந்த போட்டியின் முடிவில் பில்வாரா கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள், இதே ராஞ்சியில் விளையாடியது. இப்போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது இன்று மாலை 6.30 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகிறது.

இந்தியாவுக்கு இந்த நடுவர் ராசியில்லாதவர்… ‘6 முறை தோல்வி’ கோபத்தில் ரசிகர்கள்..!

உத்தேச அணிகள்

அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மார்ட்டின் கப்டில், டுவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா (C), அஸ்கர் ஆப்கான், திருமல்செட்டி சுமன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் பவுனிகர் (W), டினோ பெஸ்ட், கிறிஸ் மபோபு , பிரக்யான் ஓஜா, சுதீப் தியாகி.

சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்

உபுல் தரங்கா, ஆரோன் பின்ச் (C), தன்மய் ஸ்ரீவஸ்தவா, ஜெஸ்ஸி ரைடர், ராஸ் டெய்லர், கேமரூன் வைட், ஜோஹன் போத்தா, மன்விந்தர் பிஸ்லா (W), அசோக் திண்டா, சுரங்க லக்மல், அப்துர் ரசாக்

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago