தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும்.
இரண்டாவது போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் பேட்டிங்கில் மீண்டும் தவறு செய்ய கூடாது என்பதற்காக கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் விளையாடும் லெவனில் மாற்றங்களைச் செய்யலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பார்லில் அமைந்துள்ள போலண்ட் பார்க் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும். இந்த மைதானத்தில் கடந்த 8 ஒருநாள் போட்டிகளில் 5ல் 250 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. போலன்ட் பார்க் மைதானத்தில் மொத்தம் 15 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணி 8 போட்டிகளிலும், சேஸிங் அணி 6 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எடுத்த 353 ரன்களே இந்த மைதானத்தில் அதிகபட்ச ரன்னாக உள்ளது.
பார்லில் இந்தியாவின் ஒருநாள் சாதனை:
பார்லில் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 2ல் வெற்றியும், அதே எண்ணிக்கையில் தோல்வியும் கண்டுள்ளது. ஒருநாள் போட்டி டை உள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக 351 ரன்கள் உள்ளது. 2001ல் கென்யாவுக்கு எதிராக இந்தியா இந்த ஸ்கோரை அடித்திருந்தது.
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…