யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்! ரொனால்டோவா? மெஸ்ஸியா?
உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற மெஸ்ஸியுடன், ஒப்பிடும்போது ரொனால்டோவின் சம்பளம் எவ்வளவு.
கால்பந்து உலகத்தில் யார் சிறந்த வீரர்(GOAT) என்ற கேள்வி எப்போதும் இருந்து வருகிறது, சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸியா, போர்ச்சுகல் அணியின் ரொனால்டோவா சிறந்த வீரர் யார் என்பது குறித்து நீண்ட காலமாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்த ரொனால்டோ, ஆண்டுக்கு £177 மில்லியன் பவுண்டுகள் (₹1,760 கோடிக்கு) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் மெஸ்ஸி, தனது பிஎஸ்ஜி(PSG) கிளப் அணியில் ஆண்டுக்கு £107 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே பெறுகிறார், பிரேசில் அணியின் நெய்மர் ஆண்டுக்கு £78.5 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கிறார்.