2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் யார்?

Default Image

2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.

கூகுளில் சர்வதேச அளவில் 2022 ஆம் ஆண்டு அதிகமுறை தேடப்பட்ட தடகள விளையாட்டு வீரர்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்கள் முறையே, டென்னிஸ் வீரர்களான நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் மற்றும் செரீனா வில்லியம்ஸ் பிடித்துள்ளனர்.

அமெரிக்க கால்பந்து வீரர் மான்டி டியோ நான்காவது இடத்தையும், அமெரிக்க பனிச்சறுக்கு வீரர் ஷான் ஒயிட் ஐந்தாவது மற்றும் ஜப்பானிய ஸ்கேட்டிங் வீரர் யுசுரு ஹன்யு ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க கூடைப்பந்து வீரர் பிரிட்னி க்ரைனர், ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரர் ஜெரார்ட் பிக் ஆகியோர் அதிகம் தேடப்பட்ட தடகள வீரர்களில் ஏழாவது மற்றும் எட்டாவது வீரர்கள் ஆவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்