இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்து தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (SA vs IND) இடையிலான T20 போட்டித் தொடரின் கடைசி போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 106 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. முதலில் இறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இந்த மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா வெறும் 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் எய்டன் மார்க்ரம், “நாங்கள் 200 ரன்களை சேஸ் செய்ய போகிறோம் என மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் இந்த இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடலாம் என்று உணர்ந்தேன். இந்த ரன்கள் சேஸ் செய்யகூடியதாக இருந்தது. நாங்கள் பீல்டிங் செய்யும்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் மைதானத்தில் உள்ள எல்லா இடங்களிலும் அடிக்க முடியும் என்று தோன்றியது. அதை நினைத்து தான் களமிறக்கிறோம். நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் , ஆனால் இன்னும் சிறப்பாக விளையாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என கூறினார்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…