ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது? எதில் பார்க்கலாம்? முழு விவரம் இதோ!
ஐபிஎல் 2025கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசியா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, ஐபிஎல்லில் இருக்கும் அணிகள் தங்களுடைய அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விவரத்தை தீபாவளி அன்று அறிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, ஏலத்தில் எந்த வீரர்களை எந்தெந்த அணி எடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஏற்கனவே, கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த ஆண்டு (2025) சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெறவிருக்கிறது.
Read More- ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் இவர்கள் தான்! முழு பட்டியல் இதோ!
எத்தனை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்?
ஐபிஎல் 2025 ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவு செய்த நிலையில், பிசிசிஐ மொத்தம் 574 பெயர்களை தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களில் 366 இந்திய வீரர்கள் மற்றும் 208 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்.
ஏலம் நடைபெறும் நிகழ்ச்சியின் லைவ் ஸ்ட்ரீமிங்
ஐபிஎல் 2025 மெகா ஏலம் உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கும், அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமா, தளத்தில் ஒளிபரப்பாகும். எனவே, இந்த ஓடிடி தளத்தின் மூலம் நாம் ஐபிஎல் மெகா ஏலத்தை பார்க்கலாம். அதைப்போல, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும்.
ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் அதே தேதியில் தான் பெர்த்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 7:50 மணிக்கு பெர்த்தில் ஆட்டம் தொடங்கி மதியம் 2:50 மணிக்கு முடியும். எனவே, இந்த நேரத்தில் ஐபிஎல் ஏலத்தை நடத்தி அதனை ஒளிபரப்பு செய்தால் பார்வையாளர்கள் கவனம் இந்த போட்டியில் இருக்கும் என்பதற்காக பிசிசிஐ புத்திசாலித்தனமாக ஐபிஎல் ஏலத்தை மதியம் நடத்தி அதனை மதியம் ஒளிபரப்பு செய்கிறது.