ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி-20 போட்டிகள்..! 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி..!

Default Image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிக்கொண்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் பயணம் மேற்கொண்டு டி-20, டெஸ்ட் தொடர்கள், ஒருநாள் தொடர்கள் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறது.  தற்போது செயின்ட் லூசியாவில் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 5 டி-20 தொடர்கள் நடந்து வருகிறது. அதில் முதல் தொடரில் மேற்கிந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலியாவை வீழ்த்தியது.

இரண்டாவது தொடரிலும், ஆஸ்ரேலிய அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணி வீரர்கள் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து நடந்த மூன்றாவது டி-20 தொடரில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்ரேலிய அணி முடிவு செய்தது. ஆஸ்ரேலிய அணி வீரர்கள் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பு மற்றும் 141 ரன்கள் எடுத்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 142 ரன்கள் இலக்காக அமைந்தது. இதன் பின்பு களத்தில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 14.5 ஓவரில் 142 ரன்கள் மற்றும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ரேலிய அணியை வெற்றிக்கொண்டது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் ஆரோன் பின்ச் 30 ரன்கள், ஹென்ரிக்ஸ் 33 ரன்கள் எடுத்துள்ளனர். இதனை அடுத்து அதிரடி ஆட்டத்தில் இறங்கிய க்றிஸ் கெய்ல் 38 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இவரின் அசத்தல் பேட்டிங்கால் ஆஸ்ரேலிய அணியின் பந்துவீச்சை கலங்கடித்துவிட்டார்.

7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என்று அதிரடி ரன்களை குவித்த கெய்ல், அப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 5 டி-20 தொடர் கொண்ட இந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்ரேலிய அணி வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி கொண்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்