ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் சிரிப்பை காண இந்தியாவை வென்று காட்டுவோம்..கேப்டன் அதிரடி பேச்சு.!
- இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
- காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் சிரிப்பை காண இந்திய அணியை வென்று காட்டுவோம் என ஆரோன் பின்ச் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இன்று இந்தியா வந்தனர். முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 14-ம் தேதி நடக்கவுள்ளது. மும்பை போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேப்டன் பின்ச், இந்திய அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர் கொள்வது கஷ்டமான ஒன்று தான்.
மேலும், கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் லட்சக்கணக்கில் சேதங்கள், பல உயிரிழப்புகள், பல்வேறு இழப்பீடுகள் ஏற்பட்டு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக கண்டிப்பா இந்திய அணியை வென்று காட்டுவோம் என்றார். இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற தொடரை நாங்கள் கைப்பற்றினோம். எனவே அதேப்போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது என குறிப்பிடப்படுகிறது. தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.