பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஜனவரி 3(நாளை ) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மூன்றாவது போட்டிக்கு முன் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணவில்லை என தெரிவித்தார். இதனால் வார்னர் சற்று வருத்தம் அடைந்தார்.
பச்சை நிற தொப்பி காணவில்லை என்பதை தொடர்ந்து டேவிட் வார்னர் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில்” கடந்த வாரம் முதல்நாள் டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது சொந்த ஊரான சிட்னிக்குத் திரும்பினேன். டிசம்பர் 31 அன்று மெல்போர்னிலிருந்து சிட்னிக்கு குவாண்டாஸ் விமானத்தில் தனது பொருள்களுடன் ஒரு பெரிய பைக்குள் ஒரு சிறிய பையில் எனது பச்சை நிற தொப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த பை தற்போது காணவில்லை. யாரிடமாவது எனது பேக் இருந்தால் அதை என்னிடம் திருப்பித் தாருங்கள். அதன் பிறகு அவருக்கு இந்த கூடுதலாக ஒரு பையை தருகிறேன். விமான நிறுவனங்களையும், ஹோட்டல் ஊழியர்களையும் தொடர்பு கொண்டதாகவும் சிசிடிவி காட்சிகளில் யாரும் தனது பையைத் திறப்பது போன்ற எந்த காட்சியும் இல்லை. பையை திருப்பித் தருபவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த தொப்பி டெஸ்ட் போட்டியின் அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கப்படும்.
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் தொப்பி 2020 ஜனவரியில் ஏலம் விடப்பட்டது. மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது. நேற்று டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இருப்பினும், டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார். டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவுக்காக 161 ஒருநாள், 111 டெஸ்ட் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6932 ரன்களை குவித்துள்ளார். அதில் 22 சதங்கள் மற்றும் 33 அரை சதங்களை அடித்துள்ளார். இது தவிர, வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8695 ரன்களையும், வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்கள் மற்றும் 36 அரை சதங்களையும் அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் வார்னர் 2894 ரன்களை குவித்துள்ளார், அதில் ஒரு சதம் மற்றும் 24 அரை சதங்களை அடித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…