இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தோனியை வரவேற்கும் விதமாக, அவரின் ரசிகர்கள் பல விதமாக ட்வீட் செய்து வருகின்றனர்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்தாண்டு கண்டிப்பாக ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்த போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐபிஎல் தலைவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக, தல தோனி ரசிகர்கள். தோனி தலைமையில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும், ஜார்கண்ட் மாநிலம், ரஞ்சியின் பிறந்தாலும், தமிழ்நாடால் கொண்டாடப்படும் “தல” ஆவார்.
அதற்க்கு காரணம், தமிழக மக்கள் அவருக்கு அளித்த ஆதரவே ஆகும். அதன்காரணமாக, தோனியை மக்கள் செல்லமாக “தல” என்று அழைத்து வருகின்றனர். தல தோனி, கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த இந்தியா-நியூஸிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தான் அவரை பார்க்க முடித்தது.+-*
அதன்பன், கடந்த மார்ச் மாதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடும் அவர், சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது அங்கு கூடிய ரசிகர்கள், தோனி மைதானத்திற்குள் வரும்போதே அவரை கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்தை காணவுள்ளோம் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக கொண்டிருக்கின்றனர். மேலும், அவரை வரவேற்கும் விதமாக, “வெய்ட்டிங் பார் தல என்ட்ரி, செப்டம்பர் 19 கிங் அரைவ்ஸ்” போன்று ட்வீட் செய்து, அவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…