இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரண்ட் போல்ட் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வலது கையில் காயமடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என குறிப்பிடப்படுகிறது.
நியூசிலாந்து டெஸ்ட் அணி :
கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டாம் லாதம், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், ஹென்ரி நிகோலஸ், வாட்லிங், கோலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, நீல் வாக்னர், டிரன்ட் போல்ட், அஜாஸ் படேல், கெயில் ஜேமிஸன், டேர்ல் மிட்ஷெல்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…