இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரக விளங்கும் விராட் கோலி இந்த காலண்டர் ஆண்டில் விளையாடிய போட்டிகளின் மூலம் இவ்வாண்டில் 2000 ரன்களை கடந்தார். ஒரு வீரர் தனது காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக 2000 ரன்களை கடப்பது என்பது எளிதானது அல்ல. இந்திய வீரர் விராட் கோலி இதனை ஏழாவது முறையாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார். 1877ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடப்பட்டதிலிருந்து (அதிகாரப்பூர்வ சாதனையின்படி) வேறு எந்த வீரரும் இந்த சாதனையை எட்டவில்லை.
2016 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 86.50 சராசரியும் 80.91 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டு 2595 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குமார் சங்ககாரா ஆறு ஆண்டுகள் 2000 மேல் ரன்களை கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் , இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே தலா ஐந்து முறையும் 2000 மேல் ரன்களைக் கடந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…