ஏலம் சென்ற விராட் கோலியின் “ஜெர்ஸி”! எவ்வளவு விலைக்கு தெரியுமா?
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இந்திய ஜெர்சி ஏலம் விடப்பட்ட நிலையில், ரூ.40 லட்சத்திற்கு விற்கப்பட்டதுள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா ஷெட்டி இருவரும் ‘கிரிக்கெட் ஃபார் சாரிட்டி’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை மும்பையில் நடத்தினார்கள். அதில், கிரிக்கெட்டில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள் சிலர் நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலமானது பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்காக கல்வி உதவிக்காக விப்லா அரக்கட்டைகளுக்காக நடத்தப்பட்டது.
அதிகம் விற்பனையான விராட் கோலி ஜெர்சி ..!
இந்த ஏலத்தில் விராட் கோலி அணிந்து விளையாடிய ஜெர்சி ஏலத்திற்கு வந்தபோது அந்த ஜெர்சி தான் அதிகமான விலைக்கு விற்பனையானது. அவருடைய ஜெர்சியை கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கு ஒருவர் வாங்கியுள்ளது. 40 லட்சத்திற்கு விராட் கோலியின் ஜெர்சி விலை போனதை பார்த்த நெட்டிசன்கள் “எம்மாடி இவ்வளவு விலையா?’ என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், விராட் கோலியின் ஜெர்சி மட்டும் பெரிய விலைக்கு விற்பனை ஆகவில்லை அவரது கையுறைகள் கூட 28 லட்சத்துக்கு விற்கப்பட்டது.
ரோஹித், தோனி பேட் எவ்வளவு விலை?
மேலும், இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட் 24 லட்சத்துக்கும், இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி 13 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.அதைப்போல, ராகுல் டிராவிட்டின் பேட் 11 லட்ச ரூபாய்க்கும், கேஎல் ராகுலின் ஜெர்சியும் 11 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் விற்கப்பட்டது.
இந்த ஏலத்தின் மூலம் 1.93 கோடி ஏலத்தில் திரட்டப்பட்டது. இந்த ஏலத்தில் திரட்டப்பட்ட இந்த பணம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்காக கல்வி உதவிக்காக விப்லா அரக்கட்டைகளுக்காக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.