அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் – பிசிசிஐ..!

அனைத்து வித போட்டிகளுக்கும் விராட் கோலி தான் கேப்டன் என்று பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கும் விராட் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் கேப்டென்சியை இழக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஐசிசி டி-20 உலகக் கோப்பையை வெல்ல முடியாவிட்டால், விராட் தனது வெள்ளை பந்து கேப்டன்சியை இழக்கலாம் என்றும் ரோஹித் சர்மாவை இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கலாம் என்றும் செய்திகள் பரவி வந்தது.
தற்போது இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளதாவது, இவையெல்லாம் முற்றிலும் பொய்யானவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. இவை வதந்திகளாக பரவி வருகின்றன. இந்த விவகாரத்தில் பிசிசிஐ எதையும் சந்திக்கவோ அல்லது விவாதிக்கவோ இல்லை. மேலும், “விராட் கோலி தான் அனைத்து வித போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.