வீடியோ : சாண்டா கிளாஸ் உடையில் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி.!
- விராட் கோலி கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சாண்டா கிளாஸ் உடையணிந்து பரிசுகளை கொடுத்தார்.
- விராட் கோலியைச் சந்திக்க விரும்புகிறீர்களா.? என குழந்தைகளிடம் கேள்வியை கேட்டு விட்டு பின்னர் தான் அணிந்து இருந்த தாடியையும் , சாண்டா தொப்பியையும் கழற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
கிறிஸ்மஸுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி சாண்டா கிளாஸ் உடையணிந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று அங்கு இருந்த குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தினர்.
பின்னர் விராட் கோலி சாண்டா கிளாஸ் உடையில் இருந்து கொண்டு விராட் கோலியைச் சந்திக்க விரும்புகிறீர்களா.? என்று குழந்தைகளிடம் கேள்வியை கேட்டார். அனைத்து குழந்தைகளும் ஆமாம் என கூற உடனே கோலி தான் அணிந்து இருந்த சாண்டா கிளாஸ் உடையில் இருந்து முதலில் தாடியையும் , சாண்டா தொப்பியையும் கழற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
Watch @imVKohli dress up as ???? and bring a little Christmas cheer to the kids who cheer our sportspersons on, all year long!
This joyful season, let’s remember to spread the love. pic.twitter.com/VF8ltmDZPm
— Star Sports (@StarSportsIndia) December 20, 2019
பின்னர் இந்த வீடியோவில் , “இந்த தருணங்கள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த குழந்தைகள் அனைவரும் ஆண்டு முழுவதும் எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். மேலும் இந்த குழந்தைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருவதற்கு எனக்கு ஒரு சிறந்த நேரம் கிடைத்தது. மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என விராட் கோலி கூறினார்.