இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்சுடன் இந்தியளவில் முதலிடம் பிடித்த விராட் கோலி..
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருபவர், விராட் கோலி.
- இவர், இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பாலோயர்சுடன் இந்தியளவில் முதலிடம் பிடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருபவர், விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் எந்தளவு ஈடுபாடுடன் உள்ளாரோ, அதே அளவுடன் சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக உள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாளுக்கு நாள் பலரும் அவரை பின்தொடர்வதால், தற்பொழுது அவர் 50 மில்லியன் (அதாவது 5 கோடி) பின்டோடர்பவர்களை பெற்றார். இதுவரை 931 பதிவுகளை பதிவு செய்த அவர், முதலாவதாக 50 மில்லியன் பின்டோடர்பவர்களை பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
அவரை தொடர்ந்து, 49.9 மில்லியன் பின்டோடர்பவர்களுடன் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 2ஆம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் தீபிகா படுகோனே 44.1 மில்லியன் பின்டோடர்பவர்களுடன் உள்ளார். உலகளவில் கால்பந்து வீரரான ரொனால்டோ, 200 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார்.