தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

விராட் கோலி அனைத்து வீரர்களும் ஜகஜமாக உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது, கலீல் அகமதுவை கடுமையாக சாடி பேசிய வீடியோ வைரலாக வருகிறது.

Kohli Angry On Khaleel

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. அதன்படி, 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது.

இந்த பரபரப்பான போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி மற்றும் கலீல் அகமது ஆகியோர் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. போட்டியின் மூன்றாவது ஓவரில், சென்னை அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கலீல் அகமது, ஒரு பவுன்சை  வீசியபோது விராட் கோலி மற்றும் கலீல் அகமது இடையேயான மோதல் தொடங்கியது.

கலீல் அகமது வீசிய 3 பந்துகளையும் விராட் கோலியால் அடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக கலீல் அகமது பந்து வீசியுள்ளார். இதனை அறிந்த விராட் கோலி முகமதுவை பார்த்து போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது மைதானத்தில் பயங்கரமாக முறைத்து பார்த்தார்.

பின்னர், போட்டி முடிந்த பின், இரு அணிகளும் கை கொடுக்கும் பொழுது விராட், கலீல் அகமதுவின் கை குலுக்கிவிட்டு நெஞ்சு மீது, கை வைத்து தள்ளி விட்டார்.

இதை தொடர்ந்து, மேடை ஒன்றில் விராட் கோலி அனைத்து வீரர்களும் ஜகஜமாக உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது, கலீல் அகமதுவை கடுமையாக சாடி பேசிய வீடியோ வைரலாக வருகிறது. கலீல் என்னதான் புரிய வைக்க முயன்றாலும் அதனை விராட் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Junaid Khan (@junaidkhan7s)

இதனை அருகில் நின்றுகொண்டு, எம்.எஸ். தோனி தனது அமைதியான நடத்தையுடன் இந்த சம்பவத்தை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த உரையாடல் தொடர்பான வீடியோ, ரசிகர்களிடையே விவாதங்களைத் தூண்டியது. இது போன்ற மோதல்கள் நடைபெறுவது முதல் முறையல்ல விராட் மைதானத்தில் இவ்வாறு  எதிரணியிடம் ஈடுபட்டது பல முறை மோதலில் ஈடுபட்டது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்