இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்களை அடைந்த முதல் இந்தியர் விராட் கோலி.!

ViratKohli InstaFollowers

இன்ஸ்டாவில் 250 மில்லியன் பாலோவர்களை அடைந்த முதல் இந்தியராக விராட் கோலி சாதனை.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி சமூக வலைதளங்களில், எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து வருபவர். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி, சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசினார். தற்போது சிறப்பாக விளையாடி சதம் அடித்து வரும் கோலி, மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிவிட்டார் என்றே கூறலாம்.

விராட் கோலி தற்போது சமூக வலைதளமான இன்ஸ்டாவில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார். இவர் இன்ஸ்டாவில் 250 மில்லியன் பாலோவர்கள் என்ற நிலையை அடைந்துள்ளார். இந்திய அளவில் முதல் நபராக 250 மில்லியன் பாலோவர்களை இன்ஸ்டாவில் பெற்றுள்ளார். ஆசிய அளவிலும் அதிக பாலோவர்களை பெறுவதில் இவரே முதல் நபர்.

VK Insta
VK Insta [Image- Instagram/@ViratKohli]

உலக அளவில் ரொனால்டோ, மெஸ்ஸி க்கு அடுத்தபடியாக இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களைக் கொண்டுள்ளவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், விராட் கோலி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தயாராகி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்