மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது! வெற்றிக்கு பின் விராட் கோலி பேச்சு!

Virat Kohli

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது என விராட் கோலி கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் தர்மசாலா இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 10 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் மட்டும் தான் எடுத்து. இதன் காரணமாக பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி அதிரடியாக விளையாடிதன் காரணமாகவே பெங்களூர்  242 ரன்கள் எடுத்து. இந்த போட்டியில் விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து இருந்தார்.

இந்த போட்டிக்கு முன்னதாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்திற்கும்  இந்த போட்டியின் மூலம் பதிலடியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி ” இந்த போட்டியில் எங்களுடைய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இந்த போட்டியில் நான் என்னால் முடிந்த அளவுக்கு சுதந்திரமாக பிடித்த ஷாட்களை விளையாடினேன்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப்பை ஆடினேன். இதற்கு முன்னதாக நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாதிரி ஷாட்களை ஆடிஇருக்கிறேன். இப்போது மீண்டும் அது போல விளையாடியதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரி விளையாடவேண்டும் என்றால் நான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், அதற்கு கொஞ்சம் நம்பிக்கை தேவை. எனக்கு இந்த போட்டியில் அது அதிகமாகவே இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் அளவைவிட தரம்தான் முக்கியம் என்று நினைப்பேன். கொல்கத்தா அணிக்கு எதிராக எங்களுடைய சின்ன சுவாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்த பிறகு ரொம்பவே எங்களுடைய ரசிகர்களை ஏமாற்றிவிட்டோமோ என்று  வருத்தம் இருந்தது. அதனை தொடர்ந்து  நாங்கள் எங்களின் சுயமரியாதைக்காக விளையாட வேண்டும் என நினைத்தோம். எனவே, சரியாக விளையாடவேண்டும் கடமைக்கு விளையாடி ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இப்போது மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது” எனவும் விராட் கோலி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்