இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்தனர்.
இப்போட்டியில் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து 108 ரன்கள் எடுத்தார். பின்னர் இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 58 ரன்களுடன் வெளியேறினார்.
களத்தில் விராட்கோலி 63 , ரஹானே 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன்களில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களில் தற்போது விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன் சச்சின் 553 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் 600 ரன்கள் எடுத்து சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார்.
கோலி – 600 *
சச்சின் – 553
தோனி – 461
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…