இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பீட்டா அமைப்பின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் விலங்குகள் மீது அதிகமான பாசமும் கோலி வைத்துள்ளார்.
சில நாள்களுக்கு முன் ஒரு யானையை 8 பேர் துன்புறுத்தியதை பார்த்து எங்களுக்கு தொடர்பு கொண்டு விலங்குகளை துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என கூறினார்.பின்னர் போலீசார் உதவியுடன் அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் யானையை துன்புறுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பெங்களூரு சாலையில் அனாதையாகக் காயத்துடன் உள்ள நாய்களுக்கு வசிக்க இடம் அமைக்க உதவி செய்தார்.மேலும் தனது ரசிகர்களிடம் நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார்.
எனவே விலங்குகள் நலன் மேல் அதிக ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019-ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது.இதற்கு முன் நடிகர் மாதவன், நடிகைகள் அனுஷ்கா சர்மா, ஹேமமாலினி, சன்னி லியோன் ஆகியோருக்கும் பீட்டா விருது வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…