வைரல் வீடியோ.! அவுட் கொடுப்பது போல கையை தூக்கி மூக்கை சொறிந்த நடுவர்.!
- கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
- நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொரிந்தார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள போட்டியான பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் நடுவர் செய்த ஒரு காரியம் ரசிகர்கர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது போட்டியின் 17-வது ஓவரை அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர் ரஷீத் கான் வீசினார்.அப்போது பேட்டிங் செய்த வெப்ஸ்டர் அடித்து விளையாடும் போது பந்து பேட்டில் பட்டது.
???? Greg Davidson with a bit of an itchy schnoz at Marvel Stadium #nosegate #BBL09 pic.twitter.com/m3M772Atox
— KFC Big Bash League (@BBL) December 29, 2019
இதனால் ரஷீத் கான் அவுட் கேட்க களத்திலிருந்து நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொறிந்தார்.
இதனால் விக்கெட்டை வீழ்ந்த மகிழ்ச்சியில் ரஷீத் கான் மற்றும் சக வீரர்கள் கொண்டாடினர். பின்னர் அவுட் இல்லை என தெரிந்ததும் கோபப்பட்டார். அதன் பின்னர் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வீரர்கள் சிலர் நடுவரிடம் இது குறித்து கேட்டனர். அப்போது நடுவர் பேட் என்பது போல் சைகை காட்டினார்.