இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில் ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.
அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில் விளையாடினர்.பின்னர் முதுகு பகுதி வலி அதிகரித்ததால் அவர் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விலகினார். ஹர்திக் பாண்டிய ஏற்கனவே லண்டன் சென்று சிகிச்சை பெற்ற அதே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றார்.
மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் , அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஐந்து மாதங்கள் விளையாட முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சைசெய்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து உள்ளது என புகைப்படத்துடன் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தனது பயிற்சியாளருடன் சேர்ந்து தனது முதுகை வலுப்படுத்த பல பயிற்சிகளை செய்து வரும் வீடீயோவை ஹர்திக் பாண்டியா பயிற்சியாளர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…