நேற்றைய போட்டியில் இண்டீஸ் வீரரை தூக்கி சென்ற நியூசிலாந்து வீரர்கள் வைரல் வீடியோ.!
- நேற்று நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிர்க் மெக்கென்சிக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. அவரால் நடக்க முடியாததால் நியூசிலாந்து வீரர்கள் அவரை மைதானதிற்கு வெளியே வரை தூக்கிக் கொண்டு சென்றனர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிகள் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 16அணிகள் கலந்து கொண்டுள்ளன.இந்த 16 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் இறங்கிய 47.5ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இறங்கிய நியூசிலாந்து அணி 49.4 ஓவரில் 1239 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
An outstanding show of sportsmanship earlier today in the game between West Indies and New Zealand ???? #U19CWC | #SpiritOfCricket | #FutureStars pic.twitter.com/UAl1G37pKj
— Cricket World Cup (@cricketworldcup) January 29, 2020
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிர்க் மெக்கென்சி பேட்டிங் செய்யும்போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கடுமையான வலி காரணமாக விளையாட முடியாமல் வலியால் துடித்தார் .
பின்னர் அவர் மைதானத்தை விட்டு செல்ல முயற்சி செய்தார். ஆனால் அவரால் நடக்க கூட முடியவில்லை இதனால் மைதானத்தில் இருந்த நியூசிலாந்து வீரர்கள் அவரை மைதானதிற்கு வெளியே வரை தூக்கிக் கொண்டு சென்றனர். நியூசிலாந்து வீரர்கள் இந்த செயலுக்கு பலர் பாராட்டி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.