அதிர்ச்சி…பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாருக்கு நேர்ந்த சோகம்.!
பாராலிம்பிக் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று,முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார்.அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார்.
இதனைத் தொடர்ந்து,நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரமும், ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். தன்னுடைய ஆறாவது வாய்ப்பில் அவர் 19.81 மீட்டர் தூரம் வீசினார்.எனினும்,தன்னுடைய அதிகபட்சமான 19.91 மீட்டர் தூரத்துடன் இந்திய வீரர் வினோத் குமார் 3 ஆவது இடத்தை பிடித்து,வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.
இந்நிலையில்,வினோத் குமாரின் வெண்கலப்பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.எஃப் -52 வட்டு எறிதலில் வினோத் பங்கேற்ற தகுதியற்றவர் என்று கூறி தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 குறைய வாய்ப்புள்ளது. எனினும்,பாராலிம்பிக்கின் இந்திய அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tokyo Paralympics Technical Delegates decide Vinod Kumar is not eligible for Discus F52 class, his result in the competition is void and he loses the bronze medal pic.twitter.com/m5zzaaINZX
— ANI (@ANI) August 30, 2021