பாரிஸ் : நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 3 வெண்கலம் மட்டுமே வென்று உள்ளது. இப்படி இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் அதுவும் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு நிலவியது.
50 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அதனால் முயற்சித்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் தான் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக 100 கிராம் எடை இருக்கிறார் என ஒலிம்பிக் நிர்வாகம் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து அனைத்து இந்தியர்கள் மனதிலும் பேரிடியை இறக்கிவிட்டது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பலரும் தங்கள் ஆறுதல்களையும் , தங்கள் நம்பிக்கையையும் பகிர்ந்து வருகின்றனர். வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் தங்கள் விளக்கத்தை அறிவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், ’ வினேஷின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு ஒலிம்பிக் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் வினேஷை சந்தித்து பேசினோம். இந்திய ஒலிம்பிக் சங்கமும், அரசும் வினேஷுக்கு முழு ஆதரவை அளிக்கும் என உறுதியளித்தோம்.
இந்தியாவின் மல்யுத்தக் கூட்டமைப்பு வினேஷுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ மற்றும் மனரீதியான ஆதரவை வழங்கி வருகிறோம். வினேஷின் மருத்துவக் குழுவின் அயராத முயற்சியை நங்கள் நன்கு அறிவோம். இரவு முழுக்க போராடி எடையை குறைத்தார்.
100 கிராம் எடையை எங்களால் குறைக்க முடியாவில்லை. நாங்கள், ஒலிம்பிக் சங்கத்திடம் எவ்வளோவோ முயற்சி செய்தோம். கடுமையான வாதங்களை எடுத்துரைத்தோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம் என வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறைத்து பி.டி.உஷா தெரிவித்தார்.
வினேஷ் மருத்துவர் தின்ஷா பர்திவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், வினேஷின் தலைமுடியை கூட குறைத்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்தோம். இரவு ,முழுவதும் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயற்சித்தோம். உடல் எடையை குறைக்க , அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம். தற்போது வினேஷுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தின்ஷா பர்திவாலா தெரிவித்தார்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…