எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.! வினேஷ் தகுதிநீக்கம்., பி.டி.உஷா விளக்கம்.!

IOA Head PT Usha say about Vinesh Phogat disqualification in Paris Olympic 2024

பாரிஸ் : நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 3 வெண்கலம் மட்டுமே வென்று உள்ளது. இப்படி இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் அதுவும் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு நிலவியது.

50 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அதனால் முயற்சித்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் தான் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக 100 கிராம் எடை இருக்கிறார் என ஒலிம்பிக் நிர்வாகம் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து அனைத்து இந்தியர்கள் மனதிலும் பேரிடியை இறக்கிவிட்டது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி,  ராகுல் காந்தி என பலரும் தங்கள் ஆறுதல்களையும் , தங்கள் நம்பிக்கையையும் பகிர்ந்து வருகின்றனர்.  வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் தங்கள் விளக்கத்தை அறிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், ​’ வினேஷின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு ஒலிம்பிக் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் வினேஷை சந்தித்து பேசினோம். இந்திய ஒலிம்பிக் சங்கமும், அரசும் வினேஷுக்கு முழு ஆதரவை அளிக்கும் என உறுதியளித்தோம்.

இந்தியாவின் மல்யுத்தக் கூட்டமைப்பு வினேஷுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ மற்றும் மனரீதியான ஆதரவை வழங்கி வருகிறோம். வினேஷின் மருத்துவக் குழுவின் அயராத முயற்சியை நங்கள் நன்கு அறிவோம். இரவு முழுக்க போராடி எடையை குறைத்தார்.

100 கிராம் எடையை எங்களால் குறைக்க முடியாவில்லை. நாங்கள், ஒலிம்பிக் சங்கத்திடம் எவ்வளோவோ முயற்சி செய்தோம். கடுமையான வாதங்களை எடுத்துரைத்தோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம் என வினேஷ் போகத் தகுதிநீக்கம் குறைத்து பி.டி.உஷா தெரிவித்தார்.

வினேஷ் மருத்துவர் தின்ஷா பர்திவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், வினேஷின் தலைமுடியை கூட குறைத்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்தோம். இரவு ,முழுவதும் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயற்சித்தோம். உடல் எடையை குறைக்க , அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம். தற்போது வினேஷுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  என தின்ஷா பர்திவாலா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
INDvPAK ICC CT 2025
US President Donald Trump - Elon musk
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal