வினேஷ் போகத் விவகாரம் : வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பா? மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு..!

Vinesh Phogat

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடினார். மேலும், முதல் சுற்றில் இருந்து அதிரடியாக விளையாடிய வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடைசி நேரத்தில் இறுதி போட்டிக்கு முன் உடல் பரிசோதனையில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனால், தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கமாவது கிடைக்குமென ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், அவர் தகுதி நீக்கம் குறித்த செய்தியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதி போட்டிக்காக தனது எடையை குறைப்பதற்காக அன்றைய இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் உடல் எடையை 1.89 கிட்டத்தட்ட 2 கிலோ அளவில் தனது எடையை குறைத்தும் 100 கிராம் எடை கூடியதன் காரணமாக ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட்டை எதிர்த்து கியூபா வீராங்கனையான யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் விளையாடினார். இந்த கியூபா வீராங்கனையை தான் நம் வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை 3-0 என்ற கணக்கில் தஙகம் வென்று அசத்தினார். மேலும், அந்த  போட்டியில் தோல்வியடைந்த கியூபா வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டி முடிந்த போதிலும் தனது தகுதிநீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில் கியூபா நாடு வீராங்கனையுடன் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணை இன்று காலை நடைபெறும் என்றும் அதற்கான இடைக்கால தீர்ப்பும் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இன்று காலை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது எக்ஸ் தளத்தில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்