விஜய் ஹசாரே டிராபி 2023: நிறைய ரத்தம், வாயில் பெரிய அடி.. வலியுடன் போராடிய பாபா இந்திரஜித்!

Published by
பாலா கலியமூர்த்தி

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, ஹரியானா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 293 ரன்களை எடுத்தது. இதனால், 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது.

ஆனால், தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே அடித்து, தோல்வியை சந்தித்தது. இதில் குறிப்பாக, தமிழ்நாடு அணி சேஸிங் செய்தபோது, பாபா இந்திரஜித் போட்டியின் இடையே கீழே விழுந்ததால் அவரது முகத்திலும் வாயிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இருப்பினும், முக்கியமான போட்டி என்பதால் அணிக்காக விளையாடி ஆகவேண்டும் என்பதற்காக ரத்தம் வலிவதை தடுக்க, வாய் முழுவதும் பெரிய கட்டு ஒன்றை கட்டிக் கொண்டு (பேன்டஜ்) இந்திரஜித் பேட்டிங் செய்தார். அதன்படி, ஹரியானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 71 பந்துகளை எதிர்கொண்ட இந்திரஜித் 64 ரன்களை அடித்திருந்தார்.

டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு.. இதுவே முதல்முறை!

மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில், அணியின் வெற்றிக்காக காயத்துடன் இந்திரஜித் போராடினார். அவர் மட்டுமே அதிகபட்ச ரன்களை எட்டினார். இருப்பினும், தமிழக அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  இப்போட்டிக்கு பிறகு தனது காயம் குறித்து இந்திரஜித் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், உங்கள் அனைவரின் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. போட்டி இடையே ஐஸ் பாத் எடுத்து முடிக்கும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டேன். இதனால் முகம் மற்றும் வாயில் பலத்த அடிபட்டிருந்தது. மேல் உதட்டிலும் ஆழமாக வெட்டியிருந்தது. ரத்தம் வலிந்தது. வாயின் உட்பகுதியிலும் அடிபட்டிருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு பேட்டிங் ஆடிவிட்டேன்.

ஆனாலும், அணி வெல்லாமல் போனதில் வருத்தம்தான். போட்டியை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன். தையல் போட்டிருக்கிறார்கள். விரைவில் மீண்டுவிடுவேன் என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். காயத்தையும் பொருட்படுத்தாமல் அணி வெற்றிக்காக களமிறங்கி போராடிய இந்திரஜித்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Recent Posts

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

14 minutes ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

1 hour ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

2 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

3 hours ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

4 hours ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

5 hours ago