Chess : 2-வது சுற்றில் ஹிகாருவை வீழ்த்திய வித்தித் ..!! கேண்டிடேட்ஸ்ஸில் கலக்கும் இந்தியர்கள் ..!
Chess : ஃபிடே கேண்டிடேட்ஸ் 2024 இல் நடந்த ஒரு பரபரப்பான செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி உலகின் 3-வது தரத்தில் இருக்கும் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய தொடர்தான் பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர். இந்த தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா , டி.குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்த மதிப்பு மிக்க கேண்டிடேட்ஸ் தொடரில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடரின் முதல் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தா, அலிரேசா ஃபிரோஸ்ஜாவை ட்ரா செய்தார். அதன் பின் இந்திய க்ராண்ட்மாஸ்டரான விதித் குஜராத்தியுடன் விளையாடிய போட்டியில் பிரக்ஞானந்தா மீண்டும் ட்ரா செய்தார்.
இந்நிலையில், இந்த தொடரில் 2-வது சுற்று நேற்று நடைபெற்றது, இந்த சுற்றில் முதல் போட்டியில் ஹிகாரு நகமுராவை எதிர்த்து, விதித் குஜராத்தி விளையாடினர். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் விதித் குஜராத்தி ஹிகாருவை 29-வது நகர்விலேயே வெற்றி பெற்றார். கேண்டிடேட்ச்சில் வலுவான ஹிகாருவை வென்ற 0.5 புள்ளிகள் பெற்றிந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றியை பெற்று1.5 புள்ளிகளுடன் முதல் நன்கு இடத்தில இருக்கிறார்.
இதே போல மீதமுள்ள 12 சுற்றிலும் வெற்றி பெற்று நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வெற்றி பெற்றால் உலககோப்பையை வெல்லலாம் என விதித் குஜராத்தி இருந்து வருகிறார். மேலும், இதில் கலந்து கொண்டு விளையாடி வரும் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டரானா பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, வைஷாலி மற்றும் கோனேரு ஹம்பி என 5 இந்தியர்கள் மீதும் பலரது எதிர்பரப்பு என்பது இருந்து வருகிறது.